காலையில் பல் தேய்ப்பதில் இருந்து மாலையில் கேரம் விளையாடுவது
வரை அத்தனையையும் பகிர்ந்து கொள்ளும் டிவிட்டரில் உங்களின்
செல்வாக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று எளிதில்
கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
தினமும் டிவிட் செய்யாவிட்டால் எனக்கு தூக்கமே வராது என்று
சொல்லும் பல பேரின் டிவிட்டர் செல்வாக்கை நாம் எளிதாக
கண்டுபிடிக்கலாம் கூடவே அவர்களின் நண்பர்களின் செல்வாக்கையும்
பார்க்கலாம். டிவிட்டரில் ஒருவரின் செல்வாக்கை கண்டுபிடிக்க
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://tweetlevel.edelman.com
இந்தத்தளத்திற்கு சென்று நம் டிவிட்டரின் பயனாளர் பெயரை
கொடுக்க வேண்டும் அடுத்த நிமிடம் டிவிட்டரில் நம் செல்வாக்கு
எப்படி இருக்கிறது என்று காட்டும். யாருடைய டிவிட்டர் பயனாளர்
பெயர் வேண்டுமானாலும் கொடுத்து அவர்களின் டிவிட்டர் நிலையை
அறியலாம் கூடவே நாம் செய்த டிவிட்-ன் Influence,Popularity,
Engagement மற்றும் Trust போன்ற அனைத்தையும் நொடிப்பொழுதில்
நாம் தெரிந்து கொள்ளலாம்.
Thursday, September 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment