Thursday, September 16, 2010

டிவிட்டர்-ல் நாம் பகிர்ந்து கொள்ளும் செய்திகளை இனி பேச வைத்து காதால் கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிவிட்டரில் தங்களின் செய்திகளை உடனுக்கூடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த டிவிட்டர் செய்திகளை நம் கண்ணால் படித்தால் மட்டும் போதுமா? டிவிட்டரில் வந்திருக்கும் செய்தியை காதுகுளிர கேட்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.


இணையதள முகவரி :http://twejay.com/ இந்ததளத்திற்கு சென்று Sign in with Twitter என்ற பொத்தானை அழுத்தி நம் டிவிட்டர் பயனாளர் கணக்கை கொடுத்து நுழைய வேண்டும். நாம் அனுப்பிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் ஒவ்வொரு டிவிட் செய்தியிலும் Play பொத்தான் இருக்கும் இதை சொடுக்கி டிவிட்டர் செய்திகளை நாம் கேட்கலாம். டிவிட்டரின் கணக்கில் நுழையாமல் இங்கு இருக்கும் Search என்ற கட்டத்திற்குள் விரும்பிய வார்த்தையை கொடுத்து தேட வேண்டியது தான் வரும் முடிவுகளை ஒவ்வொன்றாக நாம் கேட்கலாம்.

No comments:

Post a Comment